நாட்டில் கரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,619 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். கரோனா பேரிடர் தொடங்கியது முதலே ஒரு நாள் பாதிப்பு புதிய உச்சத
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,619 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். கரோனா பேரிடர் தொடங்கியது முதலே ஒரு நாள் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 2.73 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 1,44,178 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 19.29 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே.. தண்டவாளத்தில் விழுந்த குழந்தை.. உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் (விடியோ)
மேலும் கரோனா பாதித்த 1,619 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 12,38,52,566 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது.