முகப்பு
இந்தியா

ம.பி.யில் கரோனா சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைகள் திறப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

மத்தியப்பிரதேசத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநிலத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்காக திறக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பகிர்:

மத்தியப்பிரதேசத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநிலத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்காக திறக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

முதல்வர் சிவராஜ் சிங் சௌகானிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு உறுதி அளித்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரிகள் இன்று முதல்வரை சந்தித்து பேசவுள்ளனர். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் கரோனா பாதிப்பு குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பேசினார். 

Advertisement

அப்போது மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். 

ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்து, தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை கிடைக்கச் செய்ய ஏற்பாடு செய்யும் என்று கூறினார். 

மேலும் மாநிலத்தின் அனைத்து முக்கிய மெட்ரோ நகரங்களிலும், அரசு, தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் 2000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்த முதல்வர் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments