மனைவிக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதா கேஜரிவாலுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதா கேஜரிவாலுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கரோனா தொற்றால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவாலுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரவிந்த் கேஜரிவால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவர் தனது அலுவலகப் பணிகளை தனது வீட்டிலிருந்தே மேற்கொள்வார் என அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் இதுவரை மொத்தம் 8,77,146 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.