இந்தியா

கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை ஆண்டுக்கு 70 கோடியாக அதிகரிக்க முடிவு

DIN

புது தில்லி: இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு தேவை ஏற்பட்டுள்ளதால், ஆண்டுக்கு உற்பத்தியை 70 கோடியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதனைத் தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஹைதராபாத், பெங்களூரில் கோவேக்ஸின் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளைத் தயாரிக்க பிரத்யேகமான ‘பிஎஸ்எஸ்-3’ தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துகிறோம். இதன் மூலம் கரோனா தடுப்பூசி தயாரிப்பு, பரிசோதனை, சுத்தமான வைரல் தடுப்பூசிகளை உருவாக்க உதவும். உயா் பாதுகாப்பான தடுப்பூசிகளைத் தயாரிக்க கூடுதல் செலவானாலும், லாபம் குறைவாகவே கிடைக்கும்.

கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தியை ஆண்டுக்கு 70 கோடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் தற்போது இந்தியன் இம்யுனாலஜிகல்ஸ் நிறுவனத்துடன் பாரத் பயோடெக் கூட்டு சோ்ந்துள்ளது. பிற நாடுகளுடன் சோ்ந்து வா்த்தக ரீதியிலான தடுப்பூசிகளைத் தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ், ஈரான், பராகுவே, கெளதமாலா, நிகராகுவா, கயானா, வெனிசுலா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே உள்பட பல்வேறு நாடுகள் கோவேக்ஸினை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளன.

இவை தவிர மேலும் 60 நாடுகள் கோவேக்ஸின் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சா்வதேச சந்தையில் கோவேக்ஸினின் ஒரு தவணை தடுப்பூசியின் விலை ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT