மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு கரோனா
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான தலைவர்களின் பட்டியலில் மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாமத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு கரோனா
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான தலைவர்களின் பட்டியலில் மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான தலைவர்களின் பட்டியலில் மத்திய வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவரது சுட்டுரை பதிவில்,
கரோனா அறிகுறிகளுடன் இருந்தநிலையில் சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களைப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
நாட்டில் கரோனா தொற்று நோயின் இரண்டாவது அலை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய விளையாட்டு அமைச்சர் கிரேன் ரெஜ்ஜு, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எனப் பலர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 2,59,170 பேருக்கு நோய்த்தொற்று மற்றும் 1,761 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.