இந்தியா

’சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருக்கிறது’: மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் கோரிக்கை

DIN

தில்லி மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு தாமதமின்றி ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். 

கரோனா தொற்று பரவலால் பல்வேறு மாநிலங்களும் தவித்து வருகின்றன. தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றன. 

இந்நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பெறுவதில் பெரும் சிக்கல் நீடித்துவருவதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும் உடனடியாக மத்திய அரசு தில்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ள அரவிந்த் கேஜரிவால் தில்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தில்லி மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT