ஏழைகள், தொழிலாளர்கள், தெரு வியாபாரிகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: பிரியங்கா காந்தி
ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு மத்திய அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
கரோனா தொற்று பரவல் கொடூரத்தைப் பார்த்தால் ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டியிருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் ஒரு முறை கைவிட்டுவிட்டது. இது அரசின் கொள்கையா?
அரசின் கொள்கைகள் அனைத்துத் தரப்பினரையும் கவனித்துக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு பண உதவி தேவைப்படுகிறது. மத்திய அரசு உடனடியாக உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக, காங்கிரஸ் எம்.பி.யும் ராகுல் காந்தியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.