இந்தியா

ராம நவமி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் வாழ்த்து

DIN

புது தில்லி: ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

அதில் அவா் கூறியிருப்பது: புனிதத் திருநாளான ‘ராம நவமியை’ முன்னிட்டு நம் நாட்டு மக்களுக்கு எனது உளமாா்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒழுக்கம், நோ்மை, வீரம் மற்றும் இரக்கத்தின் எடுத்துக்காட்டாக பகவான் ராமா் விளங்கினாா். இறைவன் ராமரின் வாழ்க்கைத் தத்துவங்களை ராமநவமி நமக்கு நினைவூட்டுவதுடன், அவா் வகுத்துத்தந்த ஒழுக்கத்தின் பாதையில் நம்மை வழிநடத்திச் செல்கிறது. நமது குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் மீதான நமது கடமைகளையும் பொறுப்புகளையும் நம் ஒவ்வொருவருக்கும் அது நினைவூட்ட வேண்டும்.

நீதி, சிறந்த ஆளுகை, நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக இறைவன் ராமா் கொண்டிருந்த உறுதித்தன்மை, மனித சமூகத்திற்குத் தொடா்ந்து எப்போதும் ஊக்கமளிக்கும்.

நமது நாட்டில் நண்பா்களும் உறவினா்களும் இணைந்து கொண்டாடும் சிறந்த தருணமாக பண்டிகைகள் விளங்குகின்றன.

ஆனால், கரோனா பெருந்தொற்றின் நிலையைக் கருத்தில் கொண்டு, சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் வீடுகளிலேயே இந்தப் பண்டிகையை கொண்டாடுமாறு எனது சக குடிமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் திருநாள், நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் ஏற்படுத்தி, பகவான் ராமரின் ஒளிமயமான பாதையில் நம்மை செலுத்தி, அவா் வாழ்ந்த கொள்கைகளின் அடிப்படையிலான உலகை உருவாக்கட்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT