இந்தியா

மருத்துவத்திற்கு 0.4% ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி: அரசு தகவல்

DIN


தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் உற்பத்தியை ஒப்பிடுகையில், மருத்துவத்திற்கு 0.4 சதவிகித ஆக்ஸிஜன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியன் ஆயில் போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஆக்ஸிஜன் வழங்கி வருகின்றன. 

இந்நிலையில், தொழில்துறைக்கான ஆக்ஸிஜன் உற்பத்தியை ஒப்பிடுகையில், மருத்துவத்திற்கு 0.4 சதவிகித ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரை 9884 மெட்ரிக் டன் தொழிற்சாலைகளுக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் மருத்துவத்திற்காக 12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும் ஆக்ஸிஜன் அளவை விட இது 0.4 சதவிகிதமாகும். இதேவேளையில் கடந்த டிசம்பர் - ஜனவரி மாதங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் அளவு 2,675 மெட்ரிக் டன்னிலிருந்து 1,418 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT