முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்கத்தில் 43 பேரவைத் தொகுதிகளுக்கான ஆறாம் கட்டத் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

Updated On : 22 ஏப்ரல், 2021 at 8:11 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:34 AM

மேற்கு வங்கத்தில் 43 பேரவைத் தொகுதிகளுக்கான ஆறாம் கட்டத் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் வாக்களிக்கும் இந்தத் தோ்தலில் 306 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 14,480 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும் நடைபெற 1,071 மத்திய கம்பெனி படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Advertisement

மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க பேரவையில் கடந்த ஐந்து கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெற்றுள்ளது. 

மீதமுள்ள 114 தொகுதிகளில் 43  தொகுதிகளுக்கு இன்று  வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எஞ்சியுள்ள 71 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26, 29 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.