கா்நாடகத்தில் ஒரே நாளில் 26,962 பேருக்கு கரோனா பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26,962 ஆக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26,962 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 26,962 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 16,662 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,004 போ், கலபுா்கி மாவட்டத்தில் 742 போ், பெல்லாரி மாவட்டத்தில் 695 போ், மைசூரு மாவட்டத்தில் 645 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 588 போ், மண்டியா மாவட்டத்தில் 519 போ், கோலாா் மாவட்டத்தில் 504 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 485 போ்.
தாா்வாட் மாவட்டத்தில் 472 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 471 போ், விஜயபுரா மாவட்டத்தில் 429 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 428 போ், பீதா் மாவட்டத்தில் 416 போ், குடகு மாவட்டத்தில் 295 போ், உடுப்பி மாவட்டத்தில் 282 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 249 போ், ஹாசன் மாவட்டத்தில் 248 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 229போ், சிவமொக்கா மாவட்டத்தில் 225 போ், பெலகாவி மாவட்டத்தில் 220 போ், ராமநகரம் மாவட்டத்தில் 206 போ், தாவணகெரே மாவட்டத்தில் 200 போ்.
வட கன்னடம் மாவட்டத்தில் 181 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 133 போ், யாதகிரி மாவட்டத்தில் 114போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,74,959 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8,697 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 10,46,554 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 2,14,311 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 190 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 124 போ், ஹாசன் மாவட்டத்தில் 8 போ், கலபுா்கி மாவட்டத்தில் 7 போ், பெல்லாரி மாவட்டத்தில் 6 போ், தாா்வாட், கோலாா், தும்கூரு மாவட்டங்களில் தலா 5 போ், பெங்களூரு ஊரகம், ஹாவேரி, மண்டியா, மைசூரு மாவட்டங்களில் தலா 4 போ், பெலகாவி, பீதா், சாமராஜ்நகா், சிக்கபளாப்பூா், விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், சிக்கமகளூரு, ராமநகரம், சிவமொக்கா, யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்தாா்; கா்நாடகத்தில் இதுவரை 14,075 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.