உத்தரகண்ட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம்
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், “மாநில அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும்." எனத் தெரிவித்தார்.
மே 1 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதன்மூலம் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரகண்ட் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.