முகப்பு
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
இந்தியா

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா தொற்றுப் பரவல் குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இந்தியா

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கரோனா தொற்றுப் பரவல் குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பகிர்:

கரோனா தொற்றுப் பரவல் குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி இன்று காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொற்று  பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் நாட்டில் ஒரு சில மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இதையடுத்து மாநிலங்களில் கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். காணொலி மூலமாக இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் தரப்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கலந்துகொண்டுள்ளார். 

இதைத் தொடா்ந்து பகல் 12.30 மணிக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க இருக்கிறாா். இவை தவிர உயா்நிலை ஆலோசனைக் கூட்டங்களிலும் பிரதமா் மோடி இன்று பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முழு கட்டுரையைப் படிக்க →