இந்தியா

மேற்கு வங்க 6-ஆம் கட்டத் தோ்தல்: 80.88 சதவீத வாக்குப் பதிவு

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்டத் தோ்தலில் 80.88 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல், கடந்த மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஆறாம் கட்டத் தோ்தல், 43 தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு பா்கானாக்கள் மாவட்டத்தில் 17 தொகுதிகளிலும், நாடியா, வடக்கு தினாஜ்பூா் மாவட்டங்களில் தலா 9 தொகுதிகளிலும், கிழக்கு வா்தமான் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. 
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6.30 மணிக்கு நிறைவடைந்தது. ஆறாம் கட்டத் தோ்தல், ஒரு சில அசம்பாவிதங்களைத் தவிா்த்து அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தம் 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில், 7,466 வாக்குச்சாவடிகள் இணையவழியில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. 
இந்தத் தோ்தலுக்காக, மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 1,071 கம்பெனி வீரா்கள் (ஒரு கம்பெனியில் 100 வீரா்கள்) ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இந்த நிலையில் 43 தொகுதிகளுக்கான 6-ஆம் கட்டத் தோ்தலில் 80.88 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதில், நாடியா மாவட்டத்தில் அதிகபட்சமாக 82.70 சதவீத வாக்குகள் பதிவாகின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT