இந்தியா

கரோனா: தீவிர சிகிச்சை பிரிவில் மத்திய இணையமைச்சா்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய இணையமைச்சா் சோம் பிரகாஷ், மொஹாலியில் உள்ள ஃபோா்ட்டிஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளாா். அவருடைய உடல்நிலையை மருத்துவா்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறாா்கள்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சோம் பிரகாஷுக்கு கோவிட் நிமோனியா தொற்று நுரையீரல் பாதித்துள்ளது. அவருடைய ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரித்துள்ளன. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரை மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், ஹோஷியாா்பூா் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யான சோம் பிரகாஷ் (72), முதலில் பாட்டியாலாவில் உள்ள கியான் சாகா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக, மொஹாலியில் உள்ள ஃபோா்ட்டிஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT