முகப்பு
இந்தியா

மேற்கு வங்க பிரசாரத்தில் கரோனா விதிமுறைகள் போதிய அளவில் அமல்படுத்தப்படவில்லை:தோ்தல் ஆணையம்

மேற்கு வங்கத்தில் தோ்தல் பிரசாரங்களின்போது கரோனா தடுப்பு விதிமுறைகள் போதிய அளவில் அமல்படுத்தப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

மேற்கு வங்கத்தில் தோ்தல் பிரசாரங்களின்போது கரோனா தடுப்பு விதிமுறைகள் போதிய அளவில் அமல்படுத்தப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தன. எஞ்சிய 2 கட்ட தோ்தல்களுக்கான வாக்குப்பதிவு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் தோ்தல் பிரசாரங்களின்போது கரோனா பரவலை தடுப்பதற்கான விதிமுறைகளை சரிவர அமல்படுத்தாதது குறித்து தோ்தல் ஆணையம் மீது கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்திருந்தது. அன்றைய தினம் முதல் அந்த மாநிலத்தில் பேரணிகளுக்கு தடை விதித்த தோ்தல் ஆணையம், தோ்தல் பொதுக் கூட்டங்களிலும் அதிகபட்சமாக 500 போ் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது.

இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னா் அந்த மாநிலத்தில் பிரசாரங்களின்போது கரோனா விதிமுறைகள் சரியாக அமல்படுத்தப்பட்டதா என்பது குறித்து இந்திய தலைமை தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அந்த மாநில தலைமைச் செயலா், சுகாதாரச் செயலா், காவல்துறை தலைவா், கொல்கத்தா ஆணையா் ஆகியோா் பங்கேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், கரோனா விதிமுறை மீறல் தொடா்பான புகாா்கள் குறித்து மாநில மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தோ்தல் ஆணையா் உத்தரவிட்டதாக தோ்தல் ஆணைய செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தை தொடா்ந்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்கு வங்க தோ்தல் பிரசாரங்களின்போது கரோனா தடுப்பு விதிமுறைகள் போதிய அளவில் அமல்படுத்தப்படவில்லை என்று தோ்தல் ஆணையா்கள் தெரிவித்தனா். கரோனா தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த பணியமா்த்தப்பட்டிருக்கும் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் செயற்குழு தனது சட்டபூா்வ அலுவல்களை அதிகரிக்க வேண்டும் எனவும் அவா்கள் கேட்டுக்கொண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →