இந்தியா

நாட்டில் 13.83 கோடியைத் தாண்டியது கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை

DIN

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 13.83 கோடியைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கரோனா தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும்  திட்டத்தின் கீழ், நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13.83 கோடியைக் கடந்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 19,80,105 முகாம்களில்‌ 13,83,79,832 பயனாளிகளுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 29 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

98-வது நாளான நேற்று (ஏப்ரல் 23, 2021), நாடு முழுவதும் 29,01,412 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,38,67,997 ஆக (83.49%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,19,838 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,46,786 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம், கேரளம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 74.15 விழுக்காடு பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT