இந்தியா

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்பு

DIN

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போப்டேவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலை என்.வி.ரமணா பொறுப்பேற்றார். 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரமணா, ஆந்திர உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில நிர்வாக தீர்ப்பாயங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், கடந்த 2000-ம் ஆண்டில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நீதியாகவும் நியமிக்கப்பட்டார். 

இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அடுத்தாண்டு ஆகஸ்டு 26-ம் தேதி வரை ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகச் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT