முகப்பு
இந்தியா

கரோனா: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பலி

மத்திய பிரதேசத்தில் கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்எல்ஏ கலாவதி புரியா பலியானார்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

மத்திய பிரதேசத்தில் கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்எல்ஏ கலாவதி புரியா பலியானார். 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கலாவதி புரியா(49). இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத்தையடுத்து கடந்த 11 ஆம் தேதி அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கலாவதி புரியா இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். இதனிடையே கலாவதி புரியா மறைவுக்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் இரங்கல் தெரிவித்துள்ளார். 
மறைந்த கலாவதி புரியா 2018ஆம் ஆண்டு ஜோபட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.