இந்தியா

ஆக்ஸிஜன் இல்லையேல் தலைநகர் சீரழிந்துவிடும்: உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு கதறல்

DIN

தில்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால் தலைநகர் சீரழிந்துவிடும் என்று உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி மருத்துவமனைகளுக்கு உடனடியாக 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தில்லி அரசு வலியுறுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள 120 மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது.  எனவே தில்லி மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், தில்லியில் புதிய நோயாளிகளை மருத்துவமனைகள் நிறுத்திவிட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் வெளியேற்றி வருகின்றன.

தில்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில், 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கூட கிடைக்கப்பெறவில்லை. தற்போதைய நிலையில், 100 முதல் 150 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் வியாழக்கிழமை இரவு 25 நோயாளிகள் மரணமடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 20 பேர் மரணமடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT