முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் கரோனாவுக்கு 832 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் கரோனாவுக்கு 832 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் கரோனாவுக்கு 832 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 66,191 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 6,98,354 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கரோனாவிலிருந்து இன்று 61,450 பேர் மீண்டனர். இதுவரை 35,30,060 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு ஒரேநாளில் 832 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 64,760ஆக உயர்ந்துள்ளது. 

தலைநகர் மும்பையை பொறுத்தவரை 5,542 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 42,36,825 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.