பிரதமர் மோடியுடன் விபின் ராவத் சந்திப்பு
கரோனா தொற்றை சமாளிக்க ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்
இந்தியாபிரதமர் மோடியுடன் விபின் ராவத் சந்திப்பு
கரோனா தொற்றை சமாளிக்க ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்
பிரதமர் நரேந்திர மோடியை முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சந்தித்து பேசினார்.
கரோனா தொற்றை சமாளிக்க ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் உதவி வரும் நிலையில், பாதுகாப்புத் துறையின் மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
இதில், கரோனா தொற்றை சமாளிக்க ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.