மேற்கு வங்கம்: 12 மணி நிலவரப்படி 37.72% வாக்குகள் பதிவு
மேற்கு வங்க மாநிலத்தில் ஏழாம் கட்ட தோ்தல் இன்று காலை தொடங்கியது. 12 மணி நிலரவப்படி 37.72% வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏழாம் கட்ட தோ்தல் இன்று காலை தொடங்கியது. 12 மணி நிலரவப்படி 37.72% வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 7-வது கட்டமாக இன்று 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதன்படி, 12 மணி நிலவரப்படி 37.72 சதவீத வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக முர்ஷிதாபாத் 42.41 சதவீத வாக்குகளும், மால்டா மற்றும் தக்ஷின் தினாஜ்பூரில் 39.96 சதவீதமும் பதிவாகியுள்ளன. சால்சன் 48 சதவீத வாக்கும், ராஷ்பேஹரி மற்றும் பவானிபூரில் 27.45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Advertisement
மேற்கு வங்க தேர்தலின் 7-வது கட்டத்தில் 37 பெண்கள் உள்பட மொத்தம் 268 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
எட்டாவது மற்றும் இறுதிக் கட்டத்திற்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.