முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் 10 ஆயிரத்தைத் தாண்டிய ஒருநாள் பாதிப்பு

தெலங்கானாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
பகிர்:

தெலங்கானாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கரோனா இரண்டாம் அலையில் தெலங்கானாவில் முதல்முறையாக ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேசமயம் நேற்று ஒரேநாளில் 6,446 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

இதுவரை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,11,905 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,590 ஆகவும் உயர்ந்துள்ளது. 

மேலும் ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 52 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை 2,094 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று பாதித்து 69,221பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.