நீளிரா திரைப்படத்தைப் பாராட்டிய சூர்யா!
நீளிரா படத்தைப் பாராட்டி நடிகர் சூர்யா விடியோ வெளியிட்டது குறித்து...
இலங்கைத் தமிழர் சோமிதரண் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவான நீளிரா படத்தை நடிகர் சூர்யா விடியோ வெளியிட்டு பாராட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியாவும் இணைந்து தயாரித்துள்ள நீளிரா படம் வெள்ளிக்கிழமை (ஏப்.03) திரையரங்குகளில் வெளியானது.
1988 ஆம் ஆண்டு ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ், தனது எக்ஸ் தளத்தில் சூர்யா பேசியுள்ள விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில் சூர்யா தெரிவித்துள்ளதாவது:
“நீளீரா என்றால் நீண்ட இரவு என்பது பொருள். தற்போது சமகாலப் போரினால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதிலும் குறிப்பாக எளிய மக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒரு போர்ச் சூழலில் திருமணம் நடக்கிறது. அங்குள்ளவர்கள் அந்த இரவை எவ்வாறு கடக்கின்றனர், எவ்வளவு பேர் உயிர் பிழைக்கின்றனர் என்பதை ‘எமோஷ்னல் த்ரில்லர்’ ஆக இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
அந்த இரவை உணர்ந்தவரும் கடந்தவருமான இயக்குநர் சோமிதரணே இயக்கியுள்ளார். கடந்த காலப்போர், தற்போதைய நிலைமை இவை அனைத்துக்கும் மௌன சாட்சியாக இப்படம் நம் மனதில் நிலைத்திருக்கும். போரை விரும்பாத அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளது. அனைவரும் படத்தை திரையரங்குகளில் சென்று பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
Suriya Video has released and praised the film Neelira, directed by Somitharan and starring Naveen Chandra.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.