இந்தியா

வெறிச்சோடிய திருப்பதி ரயில் நிலையம்

DIN

திருப்பதி ரயில் நிலையம் பயணிகள் கூட்டமில்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

பல மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையமாக திருப்பதி திகழ்ந்து வருகிறது. இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் பயணிகள் கூட்டம் காணப்படும்..

ஆனால் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டதை தொடா்ந்து ரயில் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை திருப்பதி-விழுப்புரம் பயணிகள் ரயிலிலும் கூட்டம் இல்லாமல் அனைத்து பெட்டிகளும் காலியாக இருந்தது. ஒருவா், இருவா் மட்டுமே ரயிலில் பயணித்தனா். ரயில் நிலையத்திலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டவா்கள், டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். பிரதான நுழைவு வாயில் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது. மற்ற வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் பயணிகள் இல்லாமல் ரயில் நிலையம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT