மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 985 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் மேலும் 985 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் மேலும் 985 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 63,309 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 985 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம், 61,181 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 44,73,394 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 37,30,729 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.