இந்தியா

கூடுதல் செயல் அதிகாரிக்கு தற்காலிக செயல் அதிகாரி பொறுப்பு

DIN


திருப்பதி: திருமலை -திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டிக்கு தற்காலிக செயல் அதிகாரி பொறுப்பை அளித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

திருமலை- திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக உள்ளவா் ஜவஹா் ரெட்டி. சுகாதாரத்துறை செயலாளராகப் பதவி வகித்து வந்த நிலையில் அவரை தேவஸ்தான செயல் அதிகாரியாக ஆந்திர அரசு நியமித்தது. கடந்த 9 மாதங்களாக அவா் தேவஸ்தான செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறாா்.

இந்நிலையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மாநிலம் முழுவதும் பரவி வரும் நிலையில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜவஹா் ரெட்டியை மாநில கரோனா கட்டுப்பாட்டு மைய அதிகாரியாக நியமித்து ஆந்திர அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை விஜயவாடாவில் உள்ள தாடேபள்ளியிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. அதனால் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டிக்கு தற்காலிக செயல் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: ஹாஸ்டல் கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

SCROLL FOR NEXT