முகப்பு
இந்தியா

உத்தரகண்ட்டில் மே 1 வரை அரசு அலுவலகங்கள் மூடல்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உத்தரகண்ட் மாநிலத்தில் மே 1 வரை அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஏப்ரல், 2021 at 5:05 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உத்தரகண்ட் மாநிலத்தில் மே 1 வரை அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு அலுவலகங்களை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்த அரசு அலுவலகங்களை மே 1ஆம் தேதி வரை மூட மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. முழுமையான ஊரடங்கு விதிக்குமாறு அமைச்சர்கள் சிலர் வற்புறுத்தியுள்ளது.

Advertisement

முன்னதாக உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4001 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.