முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: மருந்து உற்பத்தி ஆலையில் தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி பகுதியில் செயல்பட்டு வரும் மருந்து பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி பகுதியில் செயல்பட்டு வரும் மருந்து பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் எம்.ஆர். பார்மா என்ற மருந்து பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இதனிடையே இன்று நண்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, பெரும் புகை பரவியது. ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.