சண்டீகரில் ஏப்.29 முதல் பகுதி நேரப் பொதுமுடக்கம்
அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக சண்டீகரில் ஏப்ரல் 29 முதல் பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது
அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக சண்டீகரில் ஏப்ரல் 29 முதல் பகுதி நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் சண்டீகரில் மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை பகுதிநேர பொதுமுடக்கம் அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பொதுமுடக்கத்தின்போது உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் மற்றும் திரையரங்குகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமண விழாக்களில் 50 பேர் வரையும், துக்க நிகழ்வுகளில் 20 பேர் வரையும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.