இந்தியா

‘தொலைநோக்கு பார்வையுடைய மத்திய அரசு அவசியம்’: ராகுல்காந்தி

DIN

தொலைநோக்கு பார்வையுடைய மத்திய அரசே அவசியமானது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. நாள்தோறும் உயர்ந்துவரும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் புதன்கிழமை தனது சுட்டுரைப்பதிவில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, “புதிய நாடாளுமன்றக் கட்டடம் அநாவசியமனது. தொலைநோக்குடைய மத்திய அரசு தற்போதைய அவசியத் தேவையாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வசதிகள் இல்லாததைக் குரிப்பிட்டு புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானத்தை எதிர்த்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT