மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரிப்பிற்கு பாஜக அரசின் அலட்சியமே காரணம என முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
போபாபில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநில பாஜக அரசு கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுவதாக குற்றம்சாட்டினார்.
மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான சிகிச்சை வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்த கமல்நாத் படுக்கைகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் நோயாளிகளுக்கு கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
"இந்த வசதிகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய ஒரே ஒரு மருத்துவமனை முதல்வர் காண்பிக்க வேண்டும். கரோனா 2ஆம் அலை பாதிப்பை முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும். மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரிக்க பாஜக அரசின் அலட்சியமே தான் காரணம்” என அவர் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் மத்திய பிரதேசத்தில் 12,758 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.