அசாமில் தொடர்ந்து 3ஆவது நாளாக நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு
அசாம் மாநிலம் சோனித்பூரில் வெள்ளிக்கிழமை ரிக்டர் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அசாம் மாநிலம் சோனித்பூரில் வெள்ளிக்கிழமை ரிக்டர் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை மாலை 4.49 மணியளவில் அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் 40 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த புதன்கிழமை 6.4 ரிக்டர் அளவிலும், வியாழக்கிழமை 3.6 ரிக்டர் அளவிலும் அசாமின் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.