முகப்பு
இந்தியா

ஜபல்பூரில் சாலை விபத்து: 2 பேர் பலி, 11 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்ததில் 2 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். 

Updated On : 30 ஏப்ரல், 2021 at 1:21 PM
ஜபல்பூரில் சாலை விபத்து: 2 பேர் பலி, 11 பேர் காயம்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்ததில் 2 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். 

ஜபல்பூர் மாவட்ட தலைமையகத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள குகாரா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடந்ததாக குண்டம் காவல் நிலைய ஆய்வாளர் பி.கே.மர்கம் தெரிவித்தார்.

விபத்தில் சஞ்சு மராவி (13) மற்றும் ஆம் சிங் துர்வே (26) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

Advertisement

முன்னதாக வியாழக்கிழமை பனகர் தெஹ்ஸில் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட 25க்கும் மேற்பட்டோர் டிராக்டரில் குண்டம் நகரில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து நடைபெற்றது. 

முதல்கட்ட விசாரணையில் டிராக்டர் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் குண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.