முகப்பு
இந்தியா

பொது முடக்கத்தின் போது விதிமீறல்: 1,610 வாகனங்கள் பறிமுதல்

பொது முடக்கத்தின் போது விதிமீறிய 1,610 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

பொது முடக்கத்தின் போது விதிமீறிய 1,610 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் ஏப். 28 முதல் மே 12-ஆம் தேதி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அவசரத் தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் நடமாட்டத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல், தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு, 1,610 வாகனங்களையும் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா். இதில் 1,450 இரு சக்கர வாகனங்கள், 90 மூன்று சக்கர வாகனங்கள், 70 நான்கு சக்கர வாகனங்கள் அடக்கம் என்று பெங்களூரு மாநகர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.