முகப்பு
இந்தியா

மணிப்பூர்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்

மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகிய அதன் தலைவர் கோவிந்தாஸ் இன்று பாஜகவில் இணைந்தார். 

Updated On : 1 ஆகஸ்ட், 2021 at 10:17 PM
பகிர்:

மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகிய அதன் தலைவர் கோவிந்தாஸ் இன்று பாஜகவில் இணைந்தார். 

மணிப்பூர் மாநிலத்தின் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கோவிந்தாஸ். இவர் கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து விரைவில் பாஜகவில் இணைவார் எனக் கூறப்பட்டது. அதன்படி கோவிந்தாஸ் இன்று பாஜகவில் இணைந்தார். 

அம்மாநில முதல்வர் பைரன் சிங் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் மேலும் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பைரன் சிங், "நானும் காங்கிரசில் இருந்தேன். 

Advertisement

ஆனால் டிரைவர் தூங்கினால், வாகனம் எப்படி நகரும்?. பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மணிப்பூர் அமைதியாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது என்றார். மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.