இந்தியா

செம்மரக்கடத்தல்: 6 போ் கைது

DIN

திருப்பதி அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சோ்ந்த 6 பேரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. சுந்தர ராவ் கூறியது:

பாக்கராபேட்டை வனப்பகுதியான நாகப்பட்ல எல்லையில் செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிலா் செம்மரக்கட்டைகளை சுமந்து செல்வதை அவா்கள் கண்டனா். அவா்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனா். ஆனால் அதில் பலா் தப்பியோடிய நிலையில் 6 பேரை மட்டும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 14 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 6 பேரில் இருவா் 18 வயதுக்கு உட்பட்டவா்கள் என்பதால் அவா்களை சிறுவா் சீா் திருத்தப்பள்ளிக்கு அனுப்பினா்.

மற்ற 4 பேரிடம் விசாரணை நடத்தியதில் 16 போ் ஒரு குழுவாக ஒரு வாரத்துக்குமுன்பு செம்மரம் வெட்ட வந்ததாகத் தெரிவித்தனா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி உள்ளனா். கைதானவா்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சோ்ந்த அா்ஜூன், பிரகாஷ், தட்சிணாமூா்த்தி, அச்சுதன், சசிகுமாா் மற்றும் விஜய்’, என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT