இந்தியா

3 ஆண்டுகளில் 230 அரசியல் படுகொலைகள்: மக்களவையில் தகவல்

DIN

கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் 230 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக மக்களவையில் உள்துறை அமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு அவா் எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் காரணங்களுக்காக 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 49 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 27 பேரும், பிகாரில் 26 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் 2017-ஆம் ஆண்டு 99 பேரும், 2018-இல் 59 பேரும், 2019-இல் 72 பேரும் அரசியல் பிரச்னைகள் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளனா்.

2017 முதல் 2019 வரை கா்நாடகத்தில் 24 அரசியல் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கேரளம், மகாராஷ்டிரத்தில் தலா 15 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT