இந்தியா

திரிபுராவில் தீவிரவாதிகள் தாக்குதல்: எல்லைப் பாதுகாப்புப் படையினர் இருவர் பலி

DIN

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு வீரர்கள் உயிரிழந்தனர். 

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில் துணை ஆய்வாளர் உள்பட இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 6.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சண்டை தொடங்கி நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சண்டையில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டிருக்கும் என்று கூறினர். 

தொடர்ந்து தீவிரவாதிகளை பிடிக்க அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT