கோப்புப்படம் 
இந்தியா

'குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் விவகாரம் தீவிரமானதுதான்' - பெகாஸஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

DIN

பெகாஸஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உளவறியப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தனிக் குழுவை நியமிக்கக் கோரி மூத்த பத்திரிகையாளா்கள் என்.ராம், சசி குமாா் ஆகியோா் இணைந்தும், மாா்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்குரைஞா் எம்.எல்.சா்மா ஆகியோா் தனித்தனியாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூா்யகாந்த் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. 

அப்ப்போது, 'தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் யாரும் நேரடியாக எந்த புகாரும் ஏன் அளிக்கவில்லை? அவர்களுக்கு கூடுதல் தகவல்கள் தெரிந்திருக்கும். அவர்கள் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் இந்த விவகாரம் தீவிரமானதுதான் என்று குறிப்பிட்டனர். 

முன்னதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனிநபரை வேவு பார்ப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று வாதிட்டார். 

பின்னர் மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

திருக்குறுங்குடி நம்பியாற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு: மறுகரையில் சிக்கித் தவித்த 13 போ் மீட்பு

அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

கொடைக்கானலில் 4 நாள்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்களைப் பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்

மக்கள் கண்காணிப்பு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT