இந்தியா

பெகாஸஸ் விவகாரம்: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ் எம்.பி.

DIN

பெகாஸஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியுள்ளன. 

அவையின் மாண்பை குலைக்கும் விதமாக உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டாம் என்று இரு அவைத் தலைவர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் பெகாஸஸ் விவகாரத்தை விவாதித்தால் மட்டுமே மற்ற விவாதங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என எதிர்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், முக்கியத்துவம் கருதி பெகாஸஸ் விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்தியத் தலைமை நீதிபதி, இந்திய தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு எதிரான ஆயுதமாக இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேரை இந்திய அரசு பயன்படுத்துகிறது. பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் முன்னிலையில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று அவர் தனது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT