முகப்பு
இந்தியா

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் தனமண்டி பகுதியில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்

Updated On : 6 ஆகஸ்ட், 2021 at 3:29 PM
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பகிர்:

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் தனமண்டி பகுதியில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

தீவிரவாத தடுப்பு உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில் நேற்று(வியாழக்கிழமை) இரவு தனமண்டி வனப்பகுதியில் காவல்துறை மற்றும்  பாதுகாப்புப் படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். பின் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதி செய்து தாக்குதலைத் தொடர்ந்தனர்.

இதில் அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இறந்தவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் , இதற்கு முன் எத்தனை தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் போன்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.