விவசாயிகள் குறித்து உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால், இரு அவைகளிலும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று ஜந்தர் மந்தருக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிக்க | ஆக்கத்திற்கல்ல அணு ஆயுதங்கள், அழிவிற்கே!
இதுகுறித்து வேளாண் அமைச்சர் தோமர் கூறியது:
“விவசாயிகள் குறித்து உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால், இரு அவைகளிலும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஏன் விவாதிக்க தயாராக இல்லை? அவர்கள் ஊடக வெளிச்சத்தை தான் விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 8 மாதங்களாக போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தில்லி ஜந்தர் மந்தரில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.