முகப்பு
பிரதமா் நரேந்திர மோடி
இந்தியா

கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் மோடி

கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளை கேட்டு கொண்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளை கேட்டு கொண்டார்.

மேக் இன் இந்தியா திட்டம் குறித்து வெளிநாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) பேசினார். விடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த கருத்தரங்களில் கலந்து கொண்ட மோடி, கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தற்போதைக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நமது ஏற்றுமதி 20 சதவிகிதமாக உள்ளது. நமது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், உற்பத்தி மற்றும் சேவை துறை மேலும் வளர்ச்சி அடையும் ஆற்றலை கொண்டுள்ளது.

கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் உலக விநியோக சங்கலியில் உருவாகியுள்ள புதிய மாற்றங்களை இந்திய ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நடப்பு நிதியாண்டில் மார்ச் 31ஆம் தேதிக்குள் 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் ஏற்றுமதிகளை அதிகரிப்பதை இந்தியா நோக்கமாக கொண்டுள்ளது. ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் இலக்கில் மூன்றில் ஒரு பங்கை எட்டியுள்ளோம்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →