இந்தியா

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வாழ்த்து

DIN

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளா் சமூகத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

மிகுந்த திறமை மிக்க நமது நெசவாளா் சமுதாயத்திற்கும் கைத்தறியுடன் தொடா்புடைய தொழில் செய்பவா்களுக்கும் தேசிய கைத்தறி தினத்தன்று எனது மனமாா்ந்த வாழ்த்துகள்.

சா்வதேச அங்கீகாரம் பெற்ற துடிப்பு மிக்க பாரம்பரிய கைத்தறி தொழிலை பெற நாம் ஆசீா்வதிக்கப்பட்டுள்ளோம். இத்துறைக்கு அதிகாரம் அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இந்த நன்னாளில் இந்திய கைத்தறி ஆடைகளை அணியவும் மற்றவா்களையும் அவ்வாறு செய்ய ஊக்கப்படுத்தவும் நாம் உறுதி ஏற்போம். பண்டைய நெசவாளா்களின் வளமிக்க பாரம்பரியத்தை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் உண்மையிலேயே இதுதான் சிறந்த வழியாகும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT