இந்தியா

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு கடற்படைப் பயிற்சி

DIN

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக இரு நாடுகளும் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன.

ஐக்கிய அரபு அமீரகம் தலைநகா் அபுதாபியையொட்டிய கடற்பகுதியில் நடைபெற்ற இந்த போா் பயிற்சி தொடா்பாக இந்திய கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே அபுதாபியில் ‘ஸையத் தல்வாா்’ கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படை சாா்பில் ஐஎன்எஸ் கொச்சி போா்க்கப்பல், இரண்டு ஒருங்கிணைந்த சீ கிங் எம்கே 42பி ஹெலிகாப்டா்கள் பங்கேற்றன.

ஐக்கிய அரபு அமீரகம் சாா்பில் அல்-தாஃப்ரா போா்க் கப்பல், ஏஎஸ்565பி பேந்தா் ஹெலிகாப்டா் பயிற்சியில் ஈடுபட்டன.

இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த தேடுதல், மீட்பு, மின்னணு தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று இந்திய கடற்படை செய்தித்தொடா்பாளரும் கமாண்டருமான விவேக் மத்வால் தெரிவித்தாா்.

கடந்த வாரம் இந்திய விமானப் படை தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா ஐக்கிய அரபு அமீரகம் சென்றதைத் தொடா்ந்து இந்தக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT