இந்தியா

கேரளத்தில் புதிதாக 13,049 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 13,049 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"புதிதாக 13,049 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 35,65,574 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 98,640 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 13.23 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 64 பேர். தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் 12,300 பேர். 627 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் 105 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 17,852 ஆக உயர்ந்துள்ளது.

20,004 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 33,77,691 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 1,69,512 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT