இந்தியா

மாநிலங்களிடம் 2.33 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: சுகாதாரத்துறை

DIN

மாநிலங்களின் கையிருப்பில் 2.33 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 52,40,60,890 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதில், 50,51,29,252 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. மேலும், 2,33,55,890 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.

கூடுதலாக 8,39,780 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 50.86 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT