இந்தியா

பெகாஸஸ் தயாரிக்கும் என்எஸ்ஓ நிறுவனத்துடன் எந்தப் பரிவர்த்தனையும் கிடையாது: மத்திய அரசு

DIN


பெகாஸஸ் மென்பொருளைத் தயாரிக்கும் என்எஸ்ஓ நிறுவனத்துடன் எந்தப் பரிவர்த்தனையும் கிடையாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தது.

பெகாஸஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரியும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மத்திய அரசோ இதுகுறித்து விவாதிப்பதற்கு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனால், மழைக்காலக் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கி வருகிறது.

இந்த நிலையில் பெகாஸஸ் மென்பொருளைத் தயாரிக்கும் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT